இந்தியாவின் அண்டை நாடான பூடானில் கிராமத்தை அமைத்து அதன் வழியே டோக்லாம் பகுதியை நெருங்க சாலை அமைத்துள்ள சீனாவின் குறுக்கு வழியை செயற்கைக்கோள் புகைப்படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சீனா ஏதாவது ஒரு வகையில் எல்லைப்பகுதியில் பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டே உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா — சீனா எல்லைப்பகுதியில் உள்ள டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்க முயன்றது. அப்போது இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து இருநாட்டு பிரதமர்களின் பேச்சுவார்த்தையின் மூலம் அந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டது.
இந்நிலையில், இந்திய – சீனா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பூடான் நாட்டின் 2 கி.மீ பகுதியை ஆக்கிரமித்து பங்கடா என்ற கிராமத்தை சீனா உருவாக்கி சாலை வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை சீனாவின் செய்தி ஊடகமும் உறுதி படுத்தியுள்ளது. இது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
வெளியாகியுள்ள புகைப்படத்தின் மூலம் சீனா பூடானுக்குள் அமைத்துள்ள சாலைகள் மூலம் டோக்லாம் பகுதியை எளிதில் நெருங்க முடியும் என தெரிய வந்துள்ளது. சீனாவின் இந்த செயல் இந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவே விளங்கும் என கருதப்படுகிறது.
இதையும் படியுங்கள் : இந்தியாவில் கொரோனா 2வது அலை; அச்சுறுத்தும் சுகாதாரத்துறை அமைச்சர்