இந்தியாவின் லடாக் எல்லைப்பகுதியில்ராணுவப் படைகள் இந்திய ராணுவத்தினரைத் தாக்கியுள்ளார்கள் சுமார் 20 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது சீன ஆக்கிரமிப்பு குறித்து புகார் உள்ளது. எதிர்க்கட்சிகள் சீனப்படைகள் ஆக்கிரமிப்புகளை சுட்டிக்காட்டியுள்ளனர்
ஆனால் அதை மத்திய அரசு முற்றிலும் மறுத்து வந்தது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இருந்தே லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சீனா ஆக்கிரமிப்பு செய்ததைச் செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம் எதிர்க்கட்சிகள் மேற்கோள்காட்டி உறுதி செய்தும் மத்திய அரசு அதை ஒப்புகொள்ளும் நிலையில் இல்லை
இந்நிலையில் தற்போது இந்திய பாதுகாப்பு அமைச்சகம்பரபரப்பான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கல்வான் பள்ளத்தாக்கு நடப்பதற்குப் பல உங்களுக்கு முன்னரே சீனராணுவம் அந்தப் பகுதிகளில் ஊடுருவி அங்கேஆக்கிரமிப்பு செய்ததாகக் தெரிவித்துள்ளார்கள். இது பெரியசர்ச்சையை ஏற்படுத்தியதால் மத்திய அரசு அந்த அறிக்கையை ஊடகங்களில் இருந்து உடனே நீக்கியுள்ளது
அறிக்கை வெளியிட்டதற்கு பின்நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், இந்திய பிரதமர் மோடி சீனாவுக்கு பயந்து இந்த அறிக்கையை நீக்கி உள்ளதாக நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் இதுபோன்று ஆவணங்களை நீக்குவதால் சீனா ஆக்கிரமிப்பு இல்லை என ஆகி விடாது எனவும் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “சீனாவுக்கு எதிராக நிற்பதை விடுங்கள், இந்தியப் பிரதமருக்கு அந்த பெயரைச் சொல்லக் கூட திராணி இல்லை. நமது இந்தியபகுதியில் சீன ஆக்கிரமிப்பு உள்ளதை மறுப்பதாலோ,மற்றும் இணையத்தில் இருந்து ஆவணங்களை நீக்குவதாலோ உண்மை நிலையை மாற்றி விட முடியாது” என தெரிவித்துள்ளார்