தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளம், அரபிக் கடல் மற்றும் நீண்டு உயர்ந்த மேற்கு தொடர்ச்சி மலைகளின் நடுவே அழகிய தோற்றத்துடன் அமைந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்புவரை இங்குள்ள யாவருக்குமே வறட்சி என்ற ஒன்று கற்பனையிலும் யோசித்திருக்கவாய்ப்பில்லை. அந்த அளவுக்கு செழித்து காணப்படும் கேரளத்துக்கு கடவுளின் தேசம் என்று பெயர் வைத்ததில் என்ன தவறு இருக்கமுடியும் என்ற நிலை இருந்தது ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை தற்போது கேராளாவுக்குச் சோதனை மேல் சோதனைகளாகவே வந்துகொண்டிருக்கின்றன.
கேரள கடற்கரை பகுதிகளில் 2017 ஆம் ஆண்டு இறுதியில் தாக்கிய ‘ஒகி’ புயல் பெரும்உயிர் மற்றும் பொருட் சேதங்களை விளைவித்தது. கடந்த ஆண்டு மீண்டும்கனமழையால் கேரளாவே இருளில்மூழ்கியது. பின்பு அனைத்து மாநிலங்களும் உதவிக்கரம் நீட்ட அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுதாரித்து மீண்டது. Covid19 தொற்றுநோய் சமயத்தில்கொரோனா பாதிப்பு தொடக்கத்தில் மிகுந்த வேகத்துடன்பரவியது கேரளாவில்தான். அதையும் எதிர்கொண்டார்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பைக் குறைக்கத் தொடங்கியது கேரள அரசு
மீண்டும் துரத்திய மழை , கேரளாவின் இடுக்கி, மலப்புரம், வயநாடு பகுதி கனமழைக்கு சிக்கியுள்ளது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவில் 85-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர் இறந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என கணிக்கிறர்கள்.முந்தாநாள் இரவு துபாய் நாட்டிலிருந்து கோழிக்கோடுக்கு வந்த விமானம், தரை இறங்குவதில் சிக்கலானது. திடீரென்று விபத்துக்கு உள்ளானது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 5 விமான பணியாளர்கள் உட்பட180 பேர் இருந்தனர். அவர்களில் இதுவரை 19 பேர் இறந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இறந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மற்றவர்கள் அனைவரையும் தனிமைப் படுத்தி உள்ளனர்
இந்த வேதனை குறித்து மலையாளத்தின் புகழ்பெற்ற நடிகர் மோகன்லான் ட்விட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்,நிலச்சரிவு மற்றும் விமான விபத்து ஆகியவற்றால் வாழ்க்கை இழந்தவர்களுக்கு என் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் தற்போது கோவிட் 19 பிரச்சினைகளில் சிக்கி மிகுந்த சிரமத்துடன் கையாண்டு கொண்டிருக்கும் இந்த மாதிரியான சூழலில்சூழலில் இப்படி நடந்த இந்த துயரங்கள் அதிகபட்ச மன வேதனையை தருகிறது என்று தெரிவித்துள்ளார்.
கடவுளின் தேசம் தற்போது வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற பல பேரிடர்களை ஏற்கனவே சந்தித்திருந்த கடவுளின் தேசம் கேரளா மீண்டும் மீண்டு எழும் என நம்புவோமாக .