காங்கிரஸ் கட்சியில் எந்த பதவி வழங்கினாலும் ஏற்க ராகுல் காந்தி தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சி கடந்த 2019 மக்களவை தேர்தலில் சந்தித்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார்.இந்த திடீர் முடிவால் காங்கிரஸ் கட்சியினர் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்தார்.தற்போது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டும்,தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலை முன்னிட்டும் காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை விரைவில் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி புதிய தலைவரை தேர்வு செய்வதை தேர்தல் நடைமுறைக்கே விட்டு விடுவதாகவும், கட்சியில் எந்த பொறுப்பை வழங்கினாலும் ஏற்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Read more – தமிழகத்தில் வருகின்ற 27 ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்: லாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு
இந்த கூட்டத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில்,99.9 சதவீதம் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ராகுல் காந்தியே மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வரவேண்டும் என்று விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.