உலகம் முழுவதும் கொரோனா நோயின் தாக்குதல் அதிகமாக உள்ளது, தற்போது இந்தியாவில் அதிதீவிரமாக பரவி வருகிறது நேற்று கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 64 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா நோய் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் முன்கள பணியாளர்களாக இருக்கும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அமைச்சர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர்,துப்புரவு தொழிலார்கள், போன்றோரை அதிகம் தாக்குகிறது .இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருந்தார்.
இதற்கிடையே ஒரு வார சிகிச்சைக்கு பிறகு மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று அவருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என வந்துள்ளதாக பாஜக எம்.பி மனோஜ் திவாரி ட்வீட் செய்துள்ளார். இதனால் அவர் விரைவில் விடுதிரும்புவார் என மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.