கா்நாடகத்தில் ஒரே நாளில் 25 ஆசிரியர்கள் மற்றும் 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர்:
நாடுமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கல்வியாண்டு முதல் ஆன்லைன் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது.
கர்நாடகாவில் படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் பள்ளிகளை திறக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கடந்த 1 ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தது. இந்தநிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவ்வப்போது கொரோனா தாக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த பள்ளிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
Read more – திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் தற்கொலைக்கு சமம் : தமிழக அரசுக்கு இளம் மருத்துவர் கடிதம்
தற்போது, நேற்று ஒரே நாளில் 25 ஆசிரியர்கள் மற்றும் 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமை படுத்த சுகாதார துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி ஆரம்பித்து ஒரு வார கால இடைவெளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மீண்டும் பள்ளிகள் மூட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.