கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம், அந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கையை நேற்று துவக்கியது.
மூன்று பேருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும், ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்துவதற்கு, இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.பல்வேறு நாடுகளில் இதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன.
ஐதராபாத்தை சேர்ந்த, பாரத் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதலுடன், ‘கோவாக்சின்’ என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியை துவக்கியுள்ளது.
ஹரியானா மாநிலம், ரோடாக்கில் உள்ள பி.ஜி., மருத்துவமனையில் இதற்கான நடவடிக்கைகள் முடிவடைந்து, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.