கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வேண்டுமென்று மத்திய அரசை தொடர்ந்து தொழிலதிபர்களிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்து வருகிறார்.
இந்தியாவில் ஒரேநாளில் இந்த கொடூர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற முக்கிய காரணங்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
மேலும், டெல்லியில் நேற்று முன்தினம் ஒரே மருத்துவமனையில் இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக முன்பு மத்திய அரசிடம் உதவியை நாடிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது மற்ற மாநில முதல்வர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Read more – தடுப்பூசி விலையை குறைத்து கொள்ளுங்கள்… தயாரிப்பு நிறுவனங்களுக்கு கோரிக்கை வைக்கும் மத்திய அரசு..
அதனை தொடர்ந்து, ஆக்சிஜன் தொடர்பாக நாடு முழுவதும் முன்னணி தொழிலதிபர்களிடம் அவர், ஆக்சிஜன் மற்றும் டேங்கர்கள் உங்களிடம் இருந்தால் டெல்லி அரசுக்கு தந்து உதவுங்கள். எந்த வழியாக உதவ முடியும் என்றாலும், அந்த வழியில் உதவுங்கள் என்று கடிதம் எழுதி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.