டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மகளிடம் olx நிறுவனம் மூலம் ரூபாய் 34 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி :
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா, தனது வீட்டில் உள்ள பழைய சோபாவை விற்பதாக OLX தளத்தில் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை கண்ட நபர் ஒருவர் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் சிறிதளவு பணம் செலுத்தி, அதன்பிறகு க்யூ ஆர் கோடு ஒன்றை ஹர்ஷிதா மொபைல் போனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
ஸ்கேன் செய்தால் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படியே செயல்பட்டபோது ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து 34 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.
Read more – புதிய மாவட்டமாக உதயமான விஜயநகர் : அரசாணையை பிறப்பித்த கர்நாடக அரசு
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹர்ஷிதா தனது தந்தையின் மூலம் காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளார். தற்போது டெல்லி காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




