சபரிமலையில் இன்று முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தான துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
சபரிமலை:
கொரோனா பரவல் காரணமாக சபரிமலை திருவிதாங்கூர் தேவஸ்தானம் பல கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றிவருகிறது.கேரளா அரசின் உத்தரவின் பெயரில் கடந்த 2 வார காலமாக சபரிமலையில் தரிசனத்திற்காக பக்தர்கள் வார நாட்களில் 2 ஆயிரம் நபர்களும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் நபர்களும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் முன்பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம்,அவ்வாறு தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி வழங்க படாது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்தது. இந்த நிலையில் ஐயப்ப பக்தர்களின் நிலையை கருத்தில் கொண்டு தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.
அதன்பிறகு, திருவிதாங்கூர் தேவஸ்தானம் அளித்த தகவலின் படி,அரசின் உத்தரவு அளித்த பின்னர் சபரிமலை கோவிலில் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தது.
Read more – ஒரு நூலுக்கு பணம் செலுத்துங்கள். இரண்டாம் நூலை அன்பளிப்பாக பெறுங்கள்.
தேவஸ்தான துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி இன்று (புதன்கிழமை) முதல் சபரிமலையில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. தரிசனத்திற்காக www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம். சாமி தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் என்ற சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்றார்.
மேலும், 26 ம் தேதிக்கு பின், அனைத்து பக்தர்களுக்கும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.