இணையத்தில் ஏற்பட்ட காதலால், காதலியின் பிறந்த நாளுக்காக விமானத்தில் பறந்து சிறைக்கு சென்று வந்துள்ளார்.
லக்னோ:
பெங்களூரில் மெக்கானிக்காக வேலை செய்து வந்த 21 வயது இளைஞர் சல்மான். இவருக்கு, இணையதளத்தில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அவர் காதலித்து வந்த பெண் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரி என்ற இடத்தில் வசித்தார்.
மேலும், சல்மானுக்கும் சொந்த ஊர் உத்தரபிரதேசத்தில்தான் உள்ளது.இந்தநிலையில் காதலிக்கு பிறந்தநாள் வந்தநிலையில், காதலிக்கு சர்ப்ரைஸ்ஸாக நேரில் பரிசு கொடுக்க சல்மான் விரும்பினார்.
இதனால் விமானத்தில் டிக்கெட் பதிவுசெய்து 2 ஆயிரம் கிலோமீட்டர் பறந்து சென்று லக்னோவில் இறங்கி பஸ் பிடித்து காதலியின் கிராமத்தை சென்றடைந்தார். மேலும், காதலிக்காக சாக்லெட்டுகள், டெடிபியர் பொம்மை மற்றும் பரிசுப் பொருட்களை வாங்கி சென்றிருந்தார்.
Read more – இன்றைய ராசிபலன் 13.01.2021!!!
அவர் காதலித்து வந்த பெண்ணை பார்ப்பதற்கு நேரில் சென்றபோது சல்மான் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த காதலி சிறுமி ஆவார். மேலும்,அந்த சிறுமியின் பெற்றோருக்கு இவர் யாரென்று தெரியாததால் சல்மானை பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை.
சந்தேகத்தின் பெயரில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததால் சல்மானை அழைத்துச் சென்று ஒரு நாள் இரவை போலீஸ் நிலையத்தில் கழிக்க செய்து, மறுநாள் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.அதன் பிறகு நீதிமன்றம் சல்மானை சொந்த ஜாமீனில் விடுவித்தது.