மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் பகுதியில் இன்று அதிகாலை 1.19 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 2.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதேபோல், மிசோரமின் சம்பால் பகுதியில் நேற்று இரவு 8.08 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது.
கொரோனா நோயின் தாக்கம் இந்தியாவில் அதிதீவிரமாக பரவி வர கூடிய சூழ்நிலையில் வடகிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.




