ஹரியானாவில் உள்ள ரோஹ்தக்கில் இன்று அதிகாலை 1.50 மணிக்கு 2.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஹரியாணா மாநிலத்தில் கடந்த 3 மாதங்களில் டில்லி மற்றும் தலைநகர் பகுதிகளில் 15 முறைக்கும் அதிகமாக பல்வேறு இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டுவருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இதுப்போன்ற நிலநடுக்கம் மேலும் பெரும் பீதியினை மக்களிடம் ஏற்படுத்திவருகிறது.
இந்தநிலையில் தான் ஹரியாணாவில் உள்ள ரோஹ்தக்கில் இன்று மீண்டும் அதிகாலை 1.50 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன் இறுதியில் இதே ரோஹ்தக்கில் 2.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.