டெல்லி ஆக்ரா தேசிய சாலையை முடக்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுடெல்லி:
வேளாண் மசோதா சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி மற்றும் அதன் எல்லை பகுதிகளில் பஞ்சாப்,ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 18 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு ஏற்கனவே 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கான தீர்வுகள் இதுவரை எட்டப்படவில்லை.
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விரும்பினால், நாங்கள் தயார். ஆனால் 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற எங்களது கோரிக்கை நிறைவேற்றினால் மட்டுமே இந்த போராட்டம் முடிவு பெரும் என்று விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Read more – பாதி இந்தியா பட்டினியில் இருக்கும் போது புதிய நாடாளுமன்றம் அவசியமா ? கமல்ஹாசன் கேள்வி
இந்தநிலையில் ஆக்ராவில் இருந்து டெல்லி நோக்கி வரும் தேசிய சாலையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களை கொண்டு வந்து இன்று விவசாயிகள் முற்றுகையிட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.இந்த முற்றுகை போராட்டத்தால் டெல்லியில் போக்குவரத்து பல இடங்களில் முடங்கியது.மேலும் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் நாளை (டிச.14) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.போராட்டங்களை தீவிர படுத்த விவசாய அமைப்பினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.




