4 ம் தேதி நடத்தும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும் என மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுடெல்லி:
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. இதையடுத்து மத்திய அரசு விவசாயிகளின் போராட்டதை முடிவு கொண்டுவர கடந்த 30 ம் தேதி விவசாய அமைப்பினருடன் 6 ம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
Read more – தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை : தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் சார்பில் மத்திய அரசுக்கு 4 அம்ச கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டனர். அதில் 2 அம்ச கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், குறைந்த பட்ச ஆதரவில்லை மற்றும் 3 வேளாண் மசோதாக்கள் தொடர்பான அம்சங்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக வரும் 4 ம் தேதி மீண்டும் விவசாய அமைப்பினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில், 4 ம் தேதி நடத்தும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும் என மத்திய அரசுக்கு விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். நேற்று சிங்கு எல்லையில் விவசாய அமைப்பினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
மத்திய அரசுடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் வெறும் 5 சதவீத மட்டும் தீர்வு கிடைத்துள்ளது. மீதம் உள்ள தீர்வு வரும் 4 ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை என்றால் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
ஹரியானா மாநிலத்தில் போராடி வரும் விவசாயிகள் டெல்லி வர உள்ளனர். மேலும் பெட்ரோல் பங்க்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவைகள் மூட திட்டமிட்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் டிராக்டர் பேரணி நடத்த இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.