இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுத்து வரும் நிலையில் முழு பொதுமுடக்கம் அமல் படுத்தப்படாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகும் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்தநிலையில், உலக வாங்கி குழு தலைவர் டேவிட் மால்பாஸ் உடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி வழியாக கலந்துகொண்டு பேசினார். அப்பொழுது பேசிய அவர், இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலை வேகமெடுத்து வரும் வேளையிலும் பெரிய அளவில் பொது முடக்கங்களை அமல்படுத்த அரசு மறுத்தும்,நாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Read more – வாக்கு எண்ணும் மையத்திற்குள் அதிரடியாய் நுழைந்த வாகனங்கள்.. பதறிப்போன திமுகவினர்..
முழு ஊரடங்கை அமல் படுத்துவதற்கு பதிலாக தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பத்தினரை தனிமைப்படுத்த இந்திய அரசு மேற்கொண்டு வருவதால் நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்று உறுதியளித்துள்ளார்.