இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அனுபவம் கொண்டவர். மத்திய அமைச்சரவையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர், கடந்த 2012ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க கவுரவிக்கப்பட்டார்.
இந்நிலையில், 84 வயதாகும் அவர் வழக்கமான சோதனைக்கான மருத்துவமனை சென்றபோது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரணாபிற்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறலாம் எனத் தெரிகிறது.
இதற்கிடையே தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், பரிசோதனை மேற்கொள்ளவும் பிரணாப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.