“டவர்களை அடித்து நொறுக்கிறார்கள்” என பஞ்சாப் அரசிடம் ஜியோ நிறுவனம் முறையிட்டுள்ளது.
டெல்லி :
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் தலைநகர் டெல்லியில் காலவரையற்ற அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டத்தை திரும்ப பெறுமாறு அரசை வலியுறுத்தியும் வருகின்றனர். இந்தச் சட்டங்கள் மூலம் அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபா்கள் வேளாண் துறையை கைப்பற்றுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால், பெருநிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகள், பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளால் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன. முக்கியமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடா்பு கோபுரங்கள் அதிக அளவில் சேதப்படுத்தப்படுகின்றன. இதுவரை 1,561 செல்போன் கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடக் கூடாது என பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read more – அவதூறு வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பேன் : முக ஸ்டாலின்
“ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன. இந்த நாசவேலை செய்யும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு இதில் துரிதமான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பல கோடி ரூபாய் நஷ்டத்தை தவிர்க்க முடியும் என ஜியோ வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநில அரசின் உதவியை வேண்டியுள்ளது ஜியோ நிறுவனம். அதற்காக அந்த மாநில முதல்வர் மற்றும் போலீஸ் டிஜிபி இடம் ஜியோ முறையிட்டுள்ளது.