கர்நாடகாவில் உள்ள பல்லாரியை 2 ஆக பிரித்து புதிய மாவட்டமாக விஜயநகரை உருவாக்க கர்நாடக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது.
கர்நாடகா:
கர்நாடகாவில் உள்ள பல்லாரியை 2 ஆக பிரித்து புதிய மாவட்டமாக விஜயநகரை உருவாக்க கர்நாடக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது. அதன்படி, விஜயநகர் மாவட்டத்தில் உள்ள ஒசப்பேட்டை, கூட்லகி, ஹகிரிபொம்மனஹள்ளி, கொட்டூர், ஹூவினஹடகலி, ஹரப்பனஹள்ளி ஆகிய தாலுகாக்களை கொண்ட புதிய மாவட்டம் உருவாக இருக்கிறது.
Read more – அதிமுகவில் ஏதாவது நடந்துவிடாதா என்று எதிர்பார்க்கிறார் மு.க. ஸ்டாலின் : அமைச்சர் செல்லூர் ராஜு
புதிய விஜயநகர் மாவட்டத்தின் அண்மையிலுள்ள மாவட்டங்களான சித்ரதுர்கா, பல்லாரி, கொப்பல், கதக், ஹாவேரி, தாவணகெரே போன்றவை காணப்படுகிறது.
மேலும், பல்லாரி மாவட்டத்தில் பல்லாரி, குருகோடு, சிரகுப்பா, கம்பளி, சன்டூர் ஆகிய தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளது.