ஹஜ் புனித யாத்திரை வரும் 29ம் தேதி தொடங்குகிறது என சவுதி அரசு தெரிவித்துள்ளது. சவுதி மக்களும், சவுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களும் என மொத்தம் 1000 பேருக்கு ஹஜ் பயணம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் ஆன்மிக நோக்கங்களுள் முக்கியமானது, வாழ்வில் ஒரு முறையேனும், மெக்கா, மெதினா செல்ல வேண்டும் என்பது தான். அப்படியிருக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மெக்காவில் புனித பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கானோர் தொழுகை நடத்தும் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனித பயணம், ஜூலை 29ம் தேதி தொடங்கும் என சவுதி அரசு அறிவித்துள்ளது. ஆயிரம் அல்லது அதற்கு குறைவான பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை. சவுதி மக்களும், அங்கு தங்கியிருக்கும் சுமார் 160 வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என உத்தரவில் தெரிவித்துள்ளது.