பணியின் போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ₹1 கோடி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
கார்கில் விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு சண்டீகரில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முதல்வர் பகவந்த் மான் இன்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடுமையான சூழலில் நாட்டை பாதுகாக்கும் வீரர்களை தலை வணங்குகிறேன். பணியின் போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ₹1கோடி நிதியுதவி வழங்கப்படும். அவர்களின் தியாகத்திற்கு இது ஈடாகாது என்றாலும், பொருளாதார நெருக்கடியை சந்திக்காமல் பார்த்துக் கொள்ள உதவும்” என்றார்.
கடந்த 1999-ம் ஆண்டு, பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
-பா.ஈ.பரசுராமன்.