மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் மீதான GST வரிவிதிப்பு குறித்து கேள்வியெழுப்பிய திமுகவை சேர்ந்த 6 எம்பிக்கள் உள்பட 11 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்கிய நிலையில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி குறித்து கேள்வியெழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில் சபையில் பதாகைகளை காண்பித்ததாகவும், துணைத்தலைவர் எச்சரிக்கையை மீறி சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாக திமுக எம்பிக்கள் 4பேர் உள்பட 19 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்காக 19 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தது நியாயமற்றது என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி சுஷ்மிதா தேவ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கை மூலம் மோடி அரசிடம் பதில் இல்லை என்பது தெளிவாகிறது. நிதியமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், எங்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கலாம் என்று கூறினார்.

இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி பதிவிட்டுள்ளதாவது:
விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் மீதான GST வரிவிதிப்பு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களும் 19 மாநிலங்களவை உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் செயலாகும் என குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி எம்பி சிவா கூறுகையில், மக்கள் பிரச்சனைகளை பேச அனுமதிக்காமல் 19 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்:
திமுக:
எம்.எம். அப்துல்லா எஸ். கல்யாணசுந்தரம் ஆர். கிரிராஜன் என்.ஆர். இளங்கோ எம். சண்முகம் கனிமொழி, என்விஎன் சோமு.
திரிணாமூல் காங்கிரஸ்:
சுஷ்மிதா தேவ், மெளசம் நூர், நதிமுல் ஹக், சாந்தா சேட்ரி, டோலாசென், சான்டனு சென், அபி ரஞ்சன் பிஷ்வர்,
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி:
லிங்கையா யாதவ், ரவிஹாந்தரா வத்திராஜு, தாமோதர் ராவ்.
இந்திய கம்யூனிஸ்ட்:
பி.சந்தோஷ் குமார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:
வி.சிவதாசன்
ஏ.ஏ.ரஹிம்.
இவர்கள் 19 பேரும் இந்த வாரம் முழுவதும் மாநிலங்களவை அலுவல்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-பா.ஈ.பரசுராமன்.




