17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற விண்ணப்பிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

17 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாநில தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 17வயது நிரம்பியவர்கள் முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் சேர விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1ம் தேதி 18வயது ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் 1ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-பா.ஈ.பரசுராமன்.




