மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
விழாவில் வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கிய அவர், “இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். மேலும் பேசிய அவர், சிறப்பான ஒரு தருணத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது. தமிழகத்திற்கும் சதுரங்க விளையாட்டிற்கும் நீண்ட வரலாற்று தொடர்பு உள்ளது. தமிழகத்தில் இருந்து பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர்” என்று பேசினார்.