பயிர்காப்பீட்டு திட்டம் தொடர்பான கேள்விக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள்,தேசிய பயிர் காப்பீடு இணையதளத்தில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும். வங்கிகள் & நிதிநிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் இந்த இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்யப்படும்.
விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பிரீமியம் தொகை, அதை எவ்வாறு செலுத்துவது? மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்துவது உள்ளிட்ட விவரங்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. விவசாயிகள் யாரும் விடுபடாத வகையில் அவர்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்காக, வங்கிகளுக்கு கடைசி தேதியில் இருந்து 15 நாள்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.