பாஸ் ஆக்க வேண்டும் என்று விடைத்தாளில் ₹500 லஞ்சம் வைத்த மாணவனுக்கு ஒரு வருடத்திற்கு தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அறிவியல் பிரிவில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவன் இயற்பியல் மற்றும் வேதியியல் தேர்வுதாளில் பாஸ் ஆக வேண்டும் என்று ₹500 லஞ்சமாக வைத்து தந்துள்ளான். விடைத்தாள் திருத்தும் போது இதை கண்டறிந்த ஆசிரியர்கள் உயர் அதிகாரிகளிடம் இதுபற்றி தெரிவித்தனர். பின்பு நடந்த விசாரணையில் தாம் நன்றாக படிக்கும் மாணவன் என்றும் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவேனோ என்ற எண்ணத்தில் நண்பர்களின் பேச்சைக்கேட்டு இவ்வாறு செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுதேர்வு எழுத அனுமதிக்கப் பட்டபோதிலும் இந்த மாணவனுக்கு ஒருவருடத்திற்கு தேர்வு எழுத குஜராத் பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது.மேலும், குஜராத்தில் இந்த மாணவனுடன் சேர்ந்து 21 மாணவர்கள் தேர்வு விதியை மீறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.




