நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கை போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் கோஷமால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜாசிங் வெளியிட்ட வீடியோவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. 10 நிமிடங்கள் 27 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவின் முடிவில் நான் பேசியது அனைத்தும் நகைச்சுவை என்று கூறியுள்ளார். இந்நிலையில், அவருக்கு எதிராக இஸ்லாமியர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பாக திரண்ட அவர்கள் ராஜாசிங்கை கைது செய்யுமாறு முழக்கங்களை எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து ராஜா சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனிடையே பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் நுபுர்சர்மா பேசிய சர்ச்சை பேச்சு அடங்குவதற்குள் அடுத்த சர்ச்சை ஆரம்பமாகியுள்ளது.




