கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளாக வீட்டு கிணற்றில் இருந்து வெளியேறும் வாயுவை கொண்டு பெண் ஒருவர் வீட்டு சமையல் எரிவாயுவாக பயன்படுத்தி அசத்தி வருகிறார்.
ஆலப்புழா :
கேரள மாநிலம் ஆலப்புழாவை அடுத்த ஆராட்டுவளியை சேர்ந்த தம்பதியினர் ரமேசன் – ரத்தினம்மா. இவர்கள் குடிநீருக்காக கடந்த 10 ஆண்டுக்கு முன்பு கிணறு தோண்டியபோது,அங்கு வெளியேறிய தண்ணீர் நிறம் மாறி காணப்பட்டது.
இதனால் அவர்கள் அந்த கிணற்றை மூடிவிட்டு அதன் அருகில் வேறொரு கிணறு தோண்டியுள்ளனர். அப்பொழுது அந்த கிணற்றில் இருந்து வித்தியாசமான வாயு வெளியேறி வாயு சமையல் எரிவாயு போன்று வாசம் வெளிவந்துள்ளது. இதையடுத்து ரமேசன் அந்த வாயுவை எரித்து பார்த்தபோது கொழுந்து விட்டு எரிந்துள்ளது.
உடனே இந்த தம்பதியினர் அருகில் உள்ள பிளம்பர் ஒருவரை அழைத்து அதை தங்களது சமையல் அறையில் குழாய் மூலம் கொண்டு வந்து சமைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக வீட்டு கிணற்றில் இருந்து கிடைத்த வாயுவே அவர்கள் வீட்டு சமையல் எரிவாயுவாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
Read more – எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை “கூட்டணி” :கணவர் வழியில் பிரச்சாரத்தில் கலக்கிய பிரேமலதா விஜயகாந்த்
அக்கம் பக்கத்தினர் மூலம் இந்த தகவல் பெட்ரோலிய துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர்கள் உடனே ரமேசன் – ரத்தினம்மா வீட்டுக்கு சென்றனர். அங்குள்ள கிணற்றையும் பார்வையிட்டு வாயு கசிவு சில இடங்களில் ஏற்படுவது இயற்கையான நிகழ்வு. இதில் எந்த ஆபத்தும் இல்லை. மேலும் இதுகுறித்து எங்கள் துறையின் உயர் அதிகாரிகள் விரிவான ஆய்வு நடத்துவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரத்தினம்மா தெரிவிக்கையில், எங்கள் வீட்டு கிணற்றில் இருந்து கிடைத்த வாயு மூலமே நாங்கள் சமையல் செய்து வருகிறோம். மழை காலங்களில் மட்டும் கிண்ற்றில் இருந்து வாயு வெளியேறுவதில்லை. அப்போது மட்டும் அரசின் சமையல் எரிவாயுவை பயன்படுத்தி கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.