கேரளாவில் இனி சிறை கைதிகளுக்கு டி-ஷர்ட் மற்றும் பெர்முடாஸ் சீருடையாக வழங்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள சிறைச்சாலைகளில் கைதிகள் தொடர்ந்து வேஷ்டியை பயன்படுத்தி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றனர். இதனைதொடர்ந்து சிறை கைதிகளுக்கு ஆடை விஷயத்தில் மாற்றம் கொண்டு வர கேரள அரசு முடிவு செய்தது.
Read more – ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
கோழிக்கோடு சிறையில் நேற்று முன்தினம் ஒரு கைதி வேஷ்டியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, சிறைச்சாலை டி.ஜி.பி ரிஷிராஜ் சிங் கைதிகளுக்கு டி-ஷர்ட் மற்றும் பெர்முடாஸ் வழங்க முடிவு செய்துள்ளார்.இதன் முதற்கட்டமாக கோழிக்கோடு சிறையில் இந்த மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இதேபோல், பெண் கைதிகளுக்கு சுடிதார் வழங்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது.