மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் 22 உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் திணிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு முதல் மாநில அரசுகள் வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலிலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
மேலும், டெல்லி, உத்தரபிரதேஷம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் மற்றும் அடக்கம் செய்ய முடியாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்காக்களை மாயனமாக மாற்றப்பட்டு வருகிறது.
Read more – இன்றைய ராசிபலன் 28.04.2021!!!
மகாராஷ்ட்டிராவின் பீட் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் 22 உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் திணிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அம்மாவட்ட ஆட்சியர் ரவீந்த்ர ஜதாப் ‘இது குறித்து விசாரிக்க துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.