புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 16, பாஜக 9, அதிமுக 4, பாமக 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
புதுச்சேரி :
புதுச்சேரி மாநில சட்டபேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில், தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்ககோரி என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி போர் கொடி தூக்கினார். இதனால் ஒரு வாரமாக புதுச்சேரியில் உச்சகட்ட பரபரப்பு நீடித்தது. இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, வீடியோ காலில் ரங்கசாமியிடம் பேசி இழுப்பறிக்கு முற்று புள்ளி வைத்தார்.
இதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ரங்கசாமி தலைமை வகிப்பார் என்றும், முதல்வர் வேட்பாளர் ரங்கசாமி என்று பாஜக மேலிடம் அறிவித்தது. மேலும், கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து அதிகாலை முதல் பாஜக மேலிட தலைவர்கள், என் ஆர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் தற்போது வரை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள்(ஒரு நியமன எம்.எல்.ஏ பதவி), பாஜகவுக்கு 9 இடங்கள்(ஒரு நியமன எம்.எல்.ஏ பதவி) அதிமுகவுக்கு 4 இடங்கள்(ஒரு எம்.எல்.ஏ பதவி) பாமக வுக்கு 1 இடங்கள் ஒதுக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ரங்கசாமி, இன்று தனியார் ஒட்டலில் வெளியிடுகிறார்.
Read more – திமுகவிடம் இந்த தொகுதியை கேட்டுள்ளோம்… வாய்திறந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்…
இதற்கிடையில் பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, என் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 5 பேர், காங்கிரஸ் மற்றும் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.