அமெரிக்காவிடமிருந்து MQ-9B Predator என்ற ட்ரோனை( ஆளில்லா விமானம் ) வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடனான உறவில் பதட்டம் நீடித்து வருவதால் இந்திய கடற்படையினருக்காகவும் , ராணுவத்தினருக்காகவும் இந்திய அரசு 30 ஆயுத ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க திட்டமிட்டு உள்ளது.
அமெரிக்காவில் General Atomics -ல் 30 என்ற தயாரிக்கப்பட்ட 30 MQ-9B Predator என்ற ஆளில்லா விமானத்தை மூன்று பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்க இந்திய அரசு அடுத்த மாதம் ஒப்புதல் அளிக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ராணுவ திறனை மேம்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது . MQ-9B Predator என்ற ட்ரோன் சுமார் 48 மணி நேரத்திற்கு வானில் பறக்கும் திறன் கொண்டது .
மேலும் அந்த ட்ரோன் 3700 பவுண்டு எடையை சுமக்கும் திறன் கொண்டது. MQ-9B Predator ட்ரோனின் மூலம் இந்திய கடற்படையினர் தென் இந்திய பெருங்கடலில் சீன போர்க்கப்பலை சிறப்பாக கண்காணிக்க முடியும் .
மேலும் இமயமலையில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பயன்படுத்த இந்திய ராணுவத்தினற்கு உதவும் என்று தெரியவந்துள்ளது.