காகிதமற்ற டிஜிட்டல் பட்ஜெட்டை டாப்லெட் மூலம் முதன் முறையாக தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். முதன்முறையாக டிஜிட்டல் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டது. காகிதமற்ற டிஜிட்டல் பட்ஜெட்டை டாப்லெட் மூலம் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இப்போது தான் முதன்முறையாக டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டின் பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, இணையத்தில் வெளியிடப்படும். இந்த டிஜிட்டல் பட்ஜெட் மூலம் அரசுக்கு 140 கோடி ரூபாய் மிச்சமாகும். இதனிடையே சிறு குறு தொழில் முன்னேற்றும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்க வேண்டும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி இருக்கிறார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும் என்றும் எல்லைகளை வலுப்படுத்த பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு அதிகம் இருக்க வேண்டும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.




