தமிழ்மொழியை கற்க வேண்டும் என்கிற என் முயற்சி வெற்றி பெறவில்லை என மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி மன் கீ பாத் என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.இந்த நிலையில் இன்றைய தினம் அவர் மன் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையை தொடங்கினார். தமிழ் மொழியின் பெருமை குறித்து என்னிடம் பலரும் தெரிவித்தனர். தமிழ்மொழியை கற்க வேண்டும் என்கிற என் முயற்சி வெற்றி பெறவில்லை. தமிழ் மொழி மிகவும் தொன்மையானது. தமிழ் இலக்கியங்கள் உன்னதமானவை. மாணவர்கள் தேர்வு குறித்து அச்சம் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் செல்ல வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 74ஆவது முறையாக இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த உரையை நிகழ்த்தினார். நமது விஞ்ஞானிகள் குறித்து இளைஞர்கள் நிறைய படிக்க வேண்டும். தற்சார்பு பொருளாதார இலக்குக்கு அறிவியல் மிகப் பெரிய பங்களிப்பு செய்கிறது. தமிழ் தொன்மையான மொழி… தமிழ் கலாச்சார விழாக்கள் புகழ் பெற்றவை என்று பேசினார்.