உணவு கொடுத்து உதவுபவர்களை தீவிரவாதிகள்,தேச விரோதிகள் என்று அழைப்பது நமது கலாச்சாரம் இல்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் 19 வது தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தையில் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.மத்திய அரசுக்கு எதிராக இந்த போராட்டத்தினை மேலும் தீவிர படுத்துவதற்காக விவசாய அமைப்பினர்களின் தலைவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தை காலை 8 மணிக்கு தொடங்கி,மாலை 5 மணி வரை செயல்படுத்த இருக்கின்றனர்.
இந்த போராட்டம் குறித்து விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கருத்து தெரிவித்து இருந்தார்.அதனை தொடர்ந்து நேற்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி கொண்டு நாட்டை துண்டாட நினைக்கும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், சிவசேனா கட்சி தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே அளித்த பேட்டி ஒன்றில்,உணவு கொடுத்து உதவுபவர்களை தீவிரவாதிகள்,தேச விரோதிகள் என்று அழைப்பது நமது கலாச்சாரம் இல்லை. விவசாயிகளை பாகிஸ்தானியர்கள், தேச துரோகிகள் என்றால் இங்கு யார் தான் விவசாயி? இரவு பகலாக குளிரையும்,வெயிலையும் பாராமல் போராடி வரும் விவசாயிகளை பாஜக அமைச்சர்கள் கேமரா முன்பு தீவிரவாதிகள் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.