தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வெளியாட்களை கூட்டிவந்ததே மேற்கு வங்கத்தில் கொரோனா அதிகம் பரவ முக்கிய காரணம் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள் சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, 4 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை 5 ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பிரச்சாரம் மேற்கொண்டபோது கூறியதாவது;
294 தொகுதிகள் சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சி 70 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. கடந்த 10 ம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றபோது வன்முறை வெடித்து உயிரிழந்த 5 பேரின் நினைவாக சிலைகள் அமைக்கப்படும். அவர்களின் குடும்பத்துக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
Read more – வேளச்சேரியில் கொட்டும் மழையில் தேர்தலில் வாக்குகளை கொட்ட சொல்லி பிரச்சாரம்..
மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வெளியாட்களை கூட்டிவந்ததே மேற்கு வங்கத்தில் கொரோனா அதிகம் பரவ முக்கிய காரணம் என்றும், பாஜகவை இந்த மண்ணில் இருந்து அப்புறப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.