மராட்டிய மாநிலத்தில் பால் வியாபாரி ஒருவர் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி இருக்கிறார்.

மராட்டிய மாநிலம் பிவாண்டி நகரை சேர்ந்த விவசாயியும், பால் வியாபாரியுமான ஜனார்த்தன் போயர் என்பவர் ₹30 கோடி செலவில் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி உள்ளார். மேலும் இவர் நில விற்பனை, கட்டுமான தொழிலும் செய்து வருகிறார். பிவாண்டி பகுதியின் முக்கிய தொழில் முனைவோராக கருதப்படும் ஜனார்த்தன் அடிக்கடி குஜராத், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் செய்வார்.

பயண நேரத்தை குறைத்து தொழிலில் கூடுதல் வருமானம் ஈட்ட ஹெலிகாப்டர் வாங்கி இருக்கிறார். இதற்காக தனது வீ்ட்டுக்கு அருகே சுமார் 2½ ஏக்கர் நிலத்தில் ஹெலிபேட், பைலட் அறை தொழில்நுட்ப அறை ஆகியவற்றை அமைத்து உள்ளார். “எனது வணிக பயன்பாட்டுக்காக நான் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. வணிகத்தை போலவே எனது பால் வியபாபாரத்தையும் கவனித்து கொள்ள வேண்டும். அதற்காக தான் நான் ஒரு ஹெலிகாப்டைரை வாங்கி இருக்கிறேன்” என்றார் ஜனார்த்தனர்.




