போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆரியன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3ம் தேதி மும்பையில் இருந்து கோவாவிற்கு சொகுசு கப்பல் ஒன்று புறப்படுகிறது. அதில், ரேவ் பார்ட்டி நடக்காலம் என கிடைத்த தகவலின் பேரில் மும்பை பிரிவை சேர்ந்த போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் குழு சாதாரண உடையில் கப்பலில் பயணிபோது போல சென்றுள்ளனர். அப்போது போதை பொருளை பயன்படுத்தி பார்ட்டி நடந்துள்ளது,இதனை கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் ஆரியன் கானை அடைத்தனர். ஜாமீன் கோரி முதலில் கிழமை நீதிமன்றம் சென்றனர், ஆனால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில், போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீண்டும் ஒரு புதிய மனுவை ஆரியன் கான் தரப்பு வழங்கியது. ஜாமீன் மீதான வழக்கு விசாரணைக்கு வந்த போது போதை பொருள் தடுப்பு பிரிவு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆரியன் கான் ஜாமீனில் வெளியே வந்தால் விசாரணை பாதிக்கப்படும் எனவும் மேலும் ஆரியன் கான் வாட்ஸாப் தகவல்கள் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்ப்பில் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், சில மாதங்களுக்கு முன்பு போதை பொருட்களை மொத்தமாக வாங்க சில பேரங்கள் பேசப்பட்டு உள்ளதும் தெரியவந்துள்ளது. இது சர்வதேச அளவில் விரிவடைந்துள்ள காரணத்தினால் கட்டாயம் ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டனர்.
ஆனால் ஆரியன் கான் தரப்பு ஆரியன் போதை பொருள் கடத்தல் காரர் இல்லை! அல்லது அந்த கும்பலை சேர்ந்தவரோ இல்லை! என்பதை ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்தியாவில் போதை பொருள் உட்கொள்வதே சட்டப்படி குற்றம்! ஆனால் ஆரியன் சர்வதேச தரகர்களுடன் பேசியுள்ள குற்றவாளி என தெரிவித்தனர். இதனை எல்லாம் ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி, விவி பாட்டில் வழக்கை இன்று ஒத்திவைத்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி விவி பாட்டில், ஜாமீன் கோரி ஆரியன் தரப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் ஆரியனுக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறினர். மேலும், அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட 1 பெண் உட்பட 2 பேருக்குமான ஜாமீனும் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது. இவ்வழக்கில், ஆரியன் கான் உள்ளிட்ட மூவரை தவிர்த்து நைஜீரிய பிரஜை உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலில் கிழமை நீதிமன்றமும்,இ ன்று போதை பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு நீதிமன்றமும் ஜாமீனை மறுத்துள்ள காரணத்தினால் விரைவில் ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தை நாட ஆரியன்கான் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.