மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக, நடப்பாண்டில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.

கடந்த 2017ம் ஆண்டு முதல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நீட் தேர்வு, கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதம் 13ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடத்தப்பட்டது.
நீட் தேர்வை எழுத, 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், 85 சதவிகித மாணவர்கள் மட்டுமே 13ம் தேதியன்று தேர்வு எழுதி இருந்தனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.
அதையடுத்து, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு என, இரண்டாவது கட்டமாக கடந்த 14ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளிடப்பட்டு உள்ளது. www.ntaneet.nic.in என்ற இணைதளத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.
ஒரே நேரத்தில் பலரும் முடிவுகளை பார்க்க முயன்றதில் www.ntaneet.nic.in இணையதளம் முடங்கியது.




