Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

மோடியின் கனவுக்கு வந்த சோதனை!!.. தவிக்கும் டிஜிட்டல் இந்தியா

October 16, 2020

பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவு, நீட் தேர்வு முடிவால் மீண்டும் முடங்கியுள்ளது.

பிரதமர் மோடியின் புதிய இந்தியா திட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது டிஜிட்டல் மயமாக்கல். அதற்காக, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!

12000 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்

முன்னதாக பணப்பரிவர்த்தனை செயலிகள் முதல், தற்போது கொரோனா பரவலை கண்காணிப்பதற்கான ஆரோக்யசேது செயலி வரையில் டிஜிட்டல் செயல் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு சாதகமாக, இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சில ஆண்டுகள் ஆனாலும் கூட, சில சேவைகளின் தரம் மட்டும் இன்னும் மாறவே இல்லை என்பதே உண்மை.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வு முடிவுகளை வெளியான தினத்தன்றே பார்ப்பது என்பது இன்றளவும் அரிய செயலாகவே உள்ளது. அதுதான் இந்தியாவில் இணைய வசதிக்கு எந்த அளவில் வலிமையான உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு சிறந்த உதாரணமாக உள்ளது.

இந்த சூழலில் தான் கொரோனா பரவலால் பள்ளி, கல்லூரிகள் முடப்பட்ட பிறகு ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த மத்திய அரசு வலியுறுத்தியது. ஆனால், இந்த அறிவிப்பு பெரும்பாலும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கால் தினசரி வருமானமே பாதிக்கப்பட்ட நிலையில், ஸ்மார்ட் போன் என்பது ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எட்டாப் பொருளாகவே மாறியது.

ஸ்மார்ட் போன்கள் கிடைத்தும் பல இடங்களில் இணைய வசதியின்றி மாணவர்கள் குன்றின் மீதும், வீட்டு கூரையின் மீதும், மரத்தின் மீதும் இருந்தவாறும் வகுப்புகளை கவனித்ததை சமூக வலைதளங்களில் நம்மால் புகைப்படங்களாக காண முடிந்தது.

ஆனால், அதற்கும் மேலாக வகுப்புகளை கடந்து ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளை நடத்தவும் சில பல்கலைக்கழகங்கள் முயற்சியை முன்னெடுத்தன. அந்த வகையில், சென்னை பல்கலைக்கழகம் நடத்திய தேர்வின்போது, காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போனதடி என்ற வகையில் இணையதளம் முடங்கி தேர்வே ஒத்தி வைக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக தேர்வின்போது, மோசமான இணைய வேகத்தால் பலருக்கு இணைப்பு துண்டானது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் தேர்வை முழுமையாக நிறைவு செய்யாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மோசமான இணைய வசதிக்கு யார் காரணம். இதற்கு மாணவர்கள் தான் பலியாக வேண்டுமா?.

இந்நிலையில், வழக்கமாக அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே வெளியிடப்படும் நீட் தேர்வு முடிவுகள், இந்த முறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரை மணி நேரம் தாமதமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகும், ஒரே நேரத்தில் மாணவர்கள் முடிவுகளை முயன்றதால் இணையதளம் முடங்கியது. சுமார் 2 மணி நேரம் ஆகியும் இணையதளம் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.

பணப்பரிவர்த்தனை செயலிகளான கூகுள் பே, போன் பே போன்றவையும் இதே நிலை தான். பல சமயங்களில் பணத்தை சரியாக செலுத்த முடியாமல் முடங்கி வாடிக்கையாளர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கி வருகிறது.

மோசமான உட்கட்டமைப்பின் காரணமாக நாட்டின் இணைய சேவையின் நிலை இப்படி இருக்க, பிரதமர் மோடி அறிவித்த பல புதிய இந்தியாக்களில் முக்கியமானதாக கருதப்படும் டிஜிட்டல் இந்தியா எனும் கனவு என்று நினைவாகுமோ?…

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் : மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

Next Post

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்று சாதனை : Marvel Educare-ல் பயின்ற எஸ்.சஞ்சனா என்ற மாணவி அசத்தல்

Next Post

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்று சாதனை : Marvel Educare-ல் பயின்ற எஸ்.சஞ்சனா என்ற மாணவி அசத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version