பசுக்களை பாதுகாப்பதற்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாக, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவதையை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருக்கிறது. பசுக்களை காப்பாற்ற கோசாலை போன்றவற்றை அமைத்து பசு பாதுகாவளர்களை போன்றோர் செயல்படுவதோடு, பசுவதைக்கு எதிராக தனி சட்டங்களும் கூட இயற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில், பசுக்களைப் பாதுகாக்கும் வகையில் பசு நல அமைச்சகத்தை உருவாக்க அரசு முடிவெடுத்திருப்பதாக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில்: தனது தலைமையிலான மாநில அரசு, பசுக்களைப் பாதுகாக்கவும், பசுக்களின் மேம்பாட்டுக்காகவும் பசு நல அமைச்சகம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சகத்தில் கால்நடை வளர்ப்பு, வனம், பஞ்சாயத்து, ஊரக வளர்ச்சி, வீட்டு மற்றும் உழவர் நலத் துறைகள் ஆகி துறைகளும் இடம் பெறும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோபாஷ்டமியான வரும் 22-ம் தேதி, அகர் மால்வா மாவட்டத்தில் உள்ள பசுக்கள் சரணாலயத்தில், பசு அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது, என குறிப்பிட்டுள்ளார்




