டெலிமார்க்கெட்டிங் மூலம் தொல்லை கொடுத்தால் அபராதம் விதிக்கவும் இணைப்புகளை துண்டிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தலைமையில் டெல்லியில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. அப்போது டெலிமார்க்கெட்டிங் மூலம் தொல்லை கொடுப்போர் மீது அபராதங்கள் விதிக்கவும், தொடர்ந்து ஈடுபட்டால் இணைப்புகளை துண்டிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில், விரும்பத்தகாத வர்த்தக தகவல்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலமாக தொலைதொடர்பு சந்தாதாரர்களை துன்புறுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார். தொலைதொடர்பு வசதிகளை பயன்படுத்தி நடக்கும் நிதி மோசடிகளை தடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அமைச்சர், இதற்காக டிஜிட்டல் நுண்ணறிவு பிரிவு என்னும் மைய முகமை ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.