தனது இ காமர்ஸ் செயலி மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவுகளை செய்து கொள்ளலாம் என, அமேசான் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப அமேசான் நிறுவனம், தனது இ-காமர்ஸ் செயலியில் பல்வேறு அம்சங்களையம், சேவைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் விமானம் மற்றும் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டது.
அதைதொடர்ந்து தற்போது, தனது இ-காமர்ஸ் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியாக அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
Amazon Pay Tab-ல் Trains என்னும் பிரிவை கிளிக் செய்து ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்லாம்.
பிஎன்ஆர் நிலவரம், டிக்கெட் பதிவிறக்கம், காலியிடங்கள், முன்பதிவு ரத்து ஆகியவற்றை மேற்கொள்ளும் வசதிகளும் வழங்கப்பட்டு உள்ளது. Amazon Pay Balance வழியாக ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான கட்டணம் உடனடியாக திரும்ப கிடைக்கும் வசதியும் உள்ளது.
துவக்க ஆஃபராக, குறிப்பிட்ட காலம் வரை சேவை மற்றும் பேமெண்ட் கேட்வே கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
முதன்முறையாக டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு அதிகபட்சம் 100 ரூபாய் அல்லது கட்டணத்தில் 10 சதவிகிதம், பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு 12 சதவிகிதமும் cashback-ம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.