பாஜக கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்காதநிலையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமி நாராயணன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரி :
புதுச்சேரி மாநில சட்டபேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 9, என் ஆர் காங்கிரஸ் கட்சி 16, அதிமுக 5 தொகுதியில் போட்டியிடுகிறது. இதில் எந்த எந்த கட்சி எந்த எந்த தொகுதியில் போட்டியிடுகிறது. தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடவில்லை.
இந்த குழப்பமான சூழ்நிலையில் ராஜ்பவன் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்ய லட்சுமி நாராயணனுக்கு ரங்கசாமி உத்தரவிட்டார். இதையடுத்து ரங்கசாமி வீட்டிற்கு வந்த லட்சுமி நாராயணனிடம், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான A மற்றும் B formயை ரங்கசாமி கொடுத்து ஆசீர்வாதம் வழங்கினார்.
Read more – தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் மொட்டையடித்த காங்கிரஸ் தலைவி..
பின்பு அந்த விண்ணப்பம் படிவங்களுடன் அப்பா பைத்தியர் கோவிலில் வைத்து படைத்து, லட்சுமி நாராயணன் வழிபாடு செய்தார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்காத நிலையில் என் ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் லட்சுமி நாராயணன் வேட்புமனு தாக்கல் செய்வது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இன்று மாலை அனைத்து கட்சிகளும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.