ஒடிசா மாநில ஆளுநர் விநாயகர் லாலின் மனைவி சுசீலா தேவி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா மாநில ஆளுநராக இருந்து வருபவர் விநாயகர் லால். கடந்த நவம்பர் மாதம் 2-ஆம் தேதி விநாயகர் லால், அவரது 74 வயது மனைவி சுசீலா தேவி மற்றும் மேலும் நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சுசீலா தேவி புவேன்ஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சுசீலா தேவிக்கு வேறு சில நோய்களும் இருந்ததால், அவரால் முழுமையாக குணமடைய முடியவில்லை. எனவே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 21 நாட்களாக மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சை பலனின்றி சுசீலா தேவி உயிரிழந்தார்.

சுஷிலா தேவியின் மறைவுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஒடிசா காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் உள்ளிட்ட பல அமைச்சர்களும், அரசியல் தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.




