இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1270 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1270 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக,டெல்லியில் 450 பேர்,மகாராஷ்டிராவில் 320 பேர்,கேரளாவில் 109 பேர்,குஜராத் 97 பேர் ,தமிழகத்தில் 46 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒமைக்ரான் தொற்றிலிருந்து 374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 896 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் தொற்று டெல்டா வைரஸ் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை எனவும் மக்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.