இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் நிர்பந்தங்களை கடந்து ,சீக்கிரம் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்:
இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் நிர்பந்தங்களை கடந்து ,சீக்கிரம் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் இரு நாட்டு எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளிலும் உயிர் பலி தொடர்ந்து ஏற்படுவது சோகத்தை ஏற்படுத்துகிறது.முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், முஷாரப்பும் ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்து,பேச்சுவார்த்தைக்கு நல்ல தொடக்கமாக இருக்கும்”
ஜம்மு -காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி பல இடங்களில் தாக்குதல் நடத்தி வந்தது. இதில்,நமது பாதுகாப்பு படையினர் 3 பேரும், பொது மக்கள் 3 பேரும் இந்த தாக்குதலில் பலியானார்கள். இதற்கு பதிலடி கொடுத்து நம் இந்திய வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினரை சேர்ந்த 8 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.