அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட பத்து நிமிடங்களுக்கு உள்ளாக ஏர் இந்தியா விமானம் கீழே விழந்து விபத்துக்குள்ளானது.
அகமதாபாத் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பத்து நிமிடங்களுக்குள் உள்ளாக விமானி நிலையத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் மேகானி நகரில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான நிலையில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 242க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 90 பேர் அடங்கிய தேசிய பேரிடர் குழு அகமதாபாத்திற்கு விரைகிறது. தற்போது மாவட்ட போலீசார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானத்தில் குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணம் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விமான விபத்து குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். லண்டன் செல்லும் விமானம் என்பதால் வெளிநாட்டுப் பயணிகளும் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனத்த தெரிகிறது. அதிக எரிபொருளின் காரணமாக கீழே விழுந்த விமானம் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.






