கொள்ளை நோயான கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருத்து கண்டுபிடிக்கவில்லை. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு காக்க ஒரே வழி பிளாஸ்மா தெரபி சிகிச்சை மட்டுமே . இதனால் டெல்லி அரசு முதன்முதலாக பிளாஸ்மா வங்கியை தொடங்கியது. தற்போது 2-வது வங்கியை ஆரம்பித்துள்ளது. இதே போல் மற்ற மாநிலங்களும் பிளாஸ்மா வங்கியை தொடங்கும் பணிகளை துரித படுத்திவருகிறது.
இந்நிலையில் அசாம் மாநில அரசு பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.இந்த அறிவிப்பு
பிளாஸ்மா தானம் செய்பவர்களிடம் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில்
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் இருப்பதைப் பற்றிய பயமுறுத்தும் அனுபவத்தை அனுபவித்தவர். மற்றும் நோயுடன் போராடுவதில் மருத்துவத் தொழிலாளர்களின் அயராத முயற்சிகளை நேரில் கண்டவர். பிளாஸ்மா செல்களை நன்கொடையாக அளிப்பதன் மூலம் தன்னை ஒரு சமூக அக்கறை கொண்டவர் என நிரூபிக்க முடியும்.
‘‘ஒரு நபர் ஒரு முறை 400 கிராம் பிளாஸ்மா தானமாக அளிக்க முடியும். இதை வைத்து இருவருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும் மேலும் தன் கையெழுத்துடன் பிளாஸ்மா தானம் அளித்தவர் என்பதற்கான சான்றிதழ் வழங்கப்படும். அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பத்தால், இந்த சான்றிதழுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உதாரணத்திற்கு இரண்டு பேர் ஒரே மதிப்பெண் எடுத்திருந்தால், அதில் ஒருவர் பிளாஸ்மா தானம் செய்திருந்தால், அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்’’ என்றும் தெரிவித்துள்ளார்