இன்று நாடு முழுவதும் 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார்.
நாடு முழுவதும் 74-வது சுதந்திர தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு முன்பாக பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, தேசியக்கொடியை ஏற்றினார்.
வழக்கமாக சுதந்திர தின விழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தலால் பல கட்டுப்பாடுகளுடன் மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. விழாவில் மிக முக்கிய பிரமுகர்கள் மட்டும் சமூக இடைவெளிகளை பின்பற்றி கலந்து கொண்டனர். மேலும், அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.